×

சின்னாளபட்டி, கொடைரோடு பகுதியில் அறுவடைக்கு தயாரான பன்னீர் திராட்சை

*கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை : சரியான நேரத்தில் பெய்த பருவமழையால், இந்த ஆண்டு கோடை காலத்திலும் அதிகளவில் சாகுபடி செய்யபட்டுள்ள பன்னீர் திராட்சைக்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நிலக்கோட்டை மட்டுமின்றி சின்னாளப்பட்டி, செட்டியபட்டி, முருகன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, ஜல்லிக்கட்டு காமலாபுரம், கொடைரோடு, பள்ளப்பட்டி, மைக்கேல்பாளையம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் நாட்டு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த இராண்டு ஆண்டுகளாக இப்பகுதிகளில் பருவமழை, கோடைமழை சரியான நேரத்தில் அதிகளவு பெய்ததால், இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதல் பரப்பில் பன்னீர் திராட்சையை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

இதன்படி கடந்த மாதத்திற்கு முன் நடவு பணிகள் முடிவடைந்த நிலையில், அவை நன்கு வளர்ந்து தற்பொழுது காய்த்து குலுங்குகிறது. மேலும் இப்பகுதிகளில் சரியான நேரத்திற்கு பெய்த மழையால் தற்போது விளைச்சல் அதிகரித்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. சிறுமலை அடிவாரப் பகுதியில் விளையும் திராசைக்கு மார்க்கெட்டில் நல்ல மவுசு இருக்கிறது. இதனால், இங்கு உற்பத்தியாகும் பன்னீர் திராட்சை அதிக அளவில் கேரளா உட்பட அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் கூடுதல் விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post சின்னாளபட்டி, கொடைரோடு பகுதியில் அறுவடைக்கு தயாரான பன்னீர் திராட்சை appeared first on Dinakaran.

Tags : Chinnanapatti, Kodyrod region ,Chinnamapatti, Kodyrod region ,
× RELATED தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை ஒரு சில...